Health

டிஜிபி உத்தரவு எதிரொலி. கோவை மாவட்ட 122 காவலர்களுக்கு இன்று வார ஓய்வு. மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவு. காவல்துறையினர் மகிழ்ச்சி.

கோவை. செப்டம்பர். 29-

காவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு வாராந்திர விடுப்பு வழங்கிவரும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்,மற்றும் கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை வாராந்திர ஓய்வு அளித்து வருகிறார்.

காவலர்களின் பணி சுமையைக் குறைக்கும் வகையிலும், காவலர்கள் அவர்களது குடும்பத்துடன் வாரத்தில் ஒருமுறை நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் காவலர்களுக்கு வாராந்திர விடுப்பானது சுழற்சி முறையில்* வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவது‌ம் நாளை (29.09.2021) அன்று மொத்தம் 122 காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அனைத்து காவலர்களும் அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாள் அன்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தும், குடும்பத்துடன் கொண்டாட விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.