jobs

டிஜிட்டல் தொழில் வளர்ச்சியால் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.
 
30.07.22: 
click for live video

  2022 ஆம் ஆண்டில் +2 முடித்த மாணவ-மாணவிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.பொறியியல் பிரிவில் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன என்பதை  அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

    தமிழகத்தில் மொத்தம் 502 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவ படிப்பிற்கு அடுத்ததாக மாணவர்கள் தேர்வு செய்வது பொறியியல் படிப்பை தான். கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பின் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு படிப்படியாக மாணவர்கள்  எண்ணிக்கை குறைந்தது. இந்த 2022 ஆம் ஆண்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொறியியல் பாடப்பிரிவில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். புள்ளி விவரங்களின் படி, கூடுதல் எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.பொறியியல் பாடப் பிரிவில்  மாணாக்கர்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன என்பதை விளக்குகிறார் கோவை பார்க்  கல்வி குழுமங்களின் தலைவர்  அனுஷா ரவி.

     கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து ,பெரும்பாலான தொழில் முனைவோர்கள், டிஜிட்டல் ஊடகங்களில் வியாபாரத்தை வளர்க்கத் தொடங்கியுள்ளனர் .தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தொடர்பான பாடப்பிரிவுகளில் படித்த பொறியியல் மாணவ- மாணவிகளுக்கு, வீட்டிலிருந்து பணியாற்றும் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. இதேபோல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், சைபர் கிரைம், டேட்டா அனலெட்டிக்ஸ்  போன்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிக வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது என்றார்.  

   தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஒரே ஆண்டில் 3வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தி இருப்பதால்  ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.

  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால், இன்று உள்ளங்கையில் உலகம் தவழ்கிறது .தொழில் முனைவோர்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், வெப்சைட் போன்ற டிஜிட்டல் ஊடகங்களில்     விளம்பரங்களை பதிவிட ஆட்களை தேர்வு செய்கின்றனர்.வேளாண் துறை வளர்ச்சிக்கும் தகவல் தொழில் நுட்பத்தை தமிழக அரசு வித்திட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதி கோவை ரத்தினம் டெக்னா பார்க்கில் தகவல்  தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்ததே  இதற்கு சான்று. 

இந்திய அளவில் பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள்  உருவாகி உள்ளதால் ,மாணாக்கர்கள் இத்துறையை தேர்வு செய்ய காரணம் என்கிறார்  கோவை பார்க்  கல்வி குழுமங்களின் தலைவர்  அனுஷா ரவி. இந்திய அளவில் புதிய தொழில் நுட்பங்கள் ரோபாடிக்ஸ் துறை, ஏரோநாடிகள் ஸ்பேஸ் இன்ஜினியரிங் போன்ற துறைகள் வளர்ச்சி கண்டு வருகின்றன. புதிதாக வானுருதிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாடு திட்டம் சோதனையில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அதிக கவனத்தை இந்த நவீன தகவல் தொழில்நுட்பம் பெறுகிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத் துறையிலும், தற்போது படித்த இளைஞர்கள் நவீன தகவல் தொழில்நுட்ப புரிதலுடன் விவசாயம் செய்து வருவது, நம்  நாட்டின் நவீன வேளாண்மை வளர்ச்சியை  காட்டுகிறது என்றார். 
 
கோவிட் பரவல்  காரணத்தால் மருத்துவ துறையில் பயோ மெடிக்கல்,மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் நல்ல வளர்ச்சி  அடைந்துள்ளது.இதே போல டுரோன் [DRONE] எனும்  தகவல் தொழில்நுட்பம் வரும் காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை கொடுக்கும் என எதிர் பார்க்கலாம்.