market

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி தொடர்ந்து நீடிப்பு.

27.11.21:
கோவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டலத்தில் உள்ள, 18 கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களுக்கும் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.250 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கு, பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ், நைட்டிகள்,

ஆடவர்களுக்கான ரெடிமேடு சட்டைகள் கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கிறது.வாடிக்கையாளர்களின் வசதிக்காக இம்மாத இறுதி வரை, சிறப்பு தள்ளுபடி விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிளைகளிலும், வாடிக்கையாளர்களுக்காக 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, வட்டி இல்லா சிறப்பு கடன் வசதியும் உண்டு.