market

கோவை விமானப் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்கும்.

28.11.21:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளன.இதேபோல், ஐதராபாத், புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் விமான போக்குவரத்து படிப்படியாக உயர்த்தப்பட்டு, நவ முதல் தினமும் விமான போக்குவரத்து எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது. இது, டிச., மாதத்தில் 24 ஆக உயரும்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இருந்தே அதிகமானோர் பயணித்துள்ளனர். ஆக., மாதத்தில் 94 ஆயிரம் பயணிகள் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணித்துள்ளனர். இது, செப்., மாதத்தில் ஒரு லட்சத்து, 14 ஆயிரமாக உயர்ந்தது. விமான சேவை நாளொன்றுக்கு, 24 ஆக உயரும் பட்சத்தில், பயணிகள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.