market

ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு மானியத்தில் ஆடு.

01.12.21:
ஆதரவற்ற பெண்களுக்கு, 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

ஏழை விதவைகள், கணவனால் கைவிடப் பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு, 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பயனாளிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதோடு, பராமரிக்க பயிற்சியும் அளிக்கப்படும். தீவன தொகையாக ஆண்டுக்கு, 200 ரூபாய் வழங்கப்படும். விபரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.