nature

மண் உவர் நிலமாவதை தடுப்போம்-உற்பத்தியை பெருக்குவோம்.
மண்வள தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு மண் பரிசோதனை முகாம்கள்.

02.12.21:
பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதில் நிலத்தின் வளத்தை நிர்வகிப்பதில், மண் பரிசோதனை முக்கியமான ஒன்றாக உள்ளது.மண் பரிசோதனை மூலம், மண்ணில் உள்ள அமிலம், காரம், உவர் தன்மையை கண்டறிந்து மண்ணில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முடியும். மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப பயிரிடவும் முடியும். உர செலவையும் குறைக்கலாம்.

மண் வளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும், டிச., 5ம் தேதி உலக மண்வள தினமாக கொண்டாடப்படுகிறது.கோவை மண்வள தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு மண் பரிசோதனை, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என வேளாண் துறை அறிவித்துள்ளது.

மண் உவர் நிலமாவதை தடுப்போம், உற்பத்தியை பெருக்குவோம் என்ற கருத்துடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.முகாமில், மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்குப்பின் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்படும் என வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்தார்.