nature

கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு.
27 வருடங்களாக வறண்டு கிடந்த கோதவாடி குளம் தற்போது நிரம்பி வழிகிறது.இது எப்படி சாத்தியமாயிற்று?இந்த சாதனையை செய்தது யார்?என்பதனை விரிவாக பார்க்கலாம்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையம் கிராமத்தில்,சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது.1994 ஆம் ஆண்டுக்கு பின் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோதவாடி குளம் நிரம்பி வழியும் கண்கொள்ளா காட்சி தான் இது.கண்டு ரசிக்கவும் குளித்து மகிழவும் நாள் தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். 

கோதவாடி குளத்தை சீரமைக்க குளம்  பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.இதில் தன்னார்வலர்கள்,தனியார் நிறுவனங்கள்,விவசாயிகள்,பொதுமக்கள் என அனைவரையும் கொளசிகா நீர் கரங்கள்   ஒருங்கிணைத்து . கோதவாடி  குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த பட்டது. ,குளத்தை  தூர்வாரி,சீரமைக்கும் பணியை தொடங்கினார்கள். குளத்திற்கு தண்ணீர்  வரும் நீர் வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டன.
,விவசாயிகள், பாசன சங்கங்களின்  வேண்டுகோளை ஏற்று, கோதவாடி குளத்துக்கு பிஏபி வாய்க்கால் வழியாக நீர் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. செட்டிக்காபாளையம் பிஏபி கிளை கால்வாய் வழியாக நேரடியாக குளத்துக்கும், மெட்டுவாவி கிளை கால்வாய் வழியாக வடசித்தூர் ஆற்றிலும் நீர் திறக்கப்பட்டது. பல தடுப்பணைகள் நிரம்பிய பிறகு, கோதவாடி குளத்தை தண்ணீர் எட்டியது.

தற்போது தூர்வாரப்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கரில் 30 அடி உயரத்துக்கு  தண்ணீர் தேங்கியுள்ளது. குளத்தின் நீர்மட்டம் தினமும் உயர்ந்து டிசம்பர் 21 ஆம் .தேதி  மறுகால் ஓடியது விவசாயிகள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. குளம் நிறைந்து, உபரிநீர் கோதவாடி ஆற்றில் செல்கிறது .இதனால்  குளத்தை சுற்றி உள்ள 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இவ்வாண்டு பயிர் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.

கடந்த 1918 ஆம் நில அளவை ஆவணங்கள் படி இந்த கோதவாடி குளத்தின் மொத்த பரப்பளவு 394 ஏக்கர்.ஆனால் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் இன்று 150 ஏக்கராக குளத்தின் பரப்பளவு சுருங்கி உள்ளது.பருவமழை காலங்களில் வெள்ளம்.வெயில் காலங்களில் வறட்சி என்பது தமிழகத்தின் வரலாறாகி போனது.தண்ணீர் சேமிக்கும் நீர் நிலைகளை பராமரித்து,தூர் வாரி,ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாத்தால் மட்டுமே இரு காலங்களிலும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகளை களைய முடியும்.