nature

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை தடை செய்க.
02.08.22:
         

தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் எதிரான இந்தப் பொருள் நீர் நிலைகளில் கரைக்கும் பொழுது நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பெருக்கத்தை குறைக்கிறது.

மேலும் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வணங்கி அதை நேரில் கரைப்பது நமது கலாச்சாரமாகும். அதனை மாற்றி சுற்றுச்சூழலுக்கு சீர் ஏடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வைத்து வணங்கி அதனால் என்ன பயன் காணப் போகிறோம் நாம்?

எனவே தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் சிலைகளை பறிமுதல் செய்தல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இவ்வகையான சிலைகள் விற்பனை செய்வதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தமிழக அரசுக்கு மற்றும் சார்ந்து துறைகளுக்கு கோரிக்கை கடிதத்தை முன்கூட்டியே வழங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
– கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 

இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்…!