nature

கோவை, நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது;

திருப்பூர் மாவட்டத்தில் சரிந்துள்ளது.தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் இருப்பு பற்றி பொதுப்பணித்துறையினர் மாதம்தோறும் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கின்றனர்.

8 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிவடைந்து உள்ளது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த நிலத்தடி நீர் மட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், ஈரோடு, துாத்துக்குடி, திருப்பூரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39 மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. நீலகிரியில் 0.28 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.