Nature

சேலம் மாவட்டம் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மலைப்பாதைகள் மண்சரிவு ஏற்காட்டில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது இதனால் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் மலைப்பாதையில் ஏற்காடு சேலம் செல்லும் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஏற்காடு செல்லும் மக்கள் சேலம் செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரிதகதியில் ஜேசிபி கொண்டு இரண்டு சக்கர வாகனம் மட்டும் செல்ல வழிவகை செய்தனர். சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி தையல்நாயகி மற்றும் ஏற்காடு ஆய்வாளர் ரஜினி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அடிவாரத்தில் சோதனைச்சாவடியில் நான்கு சக்கர வாகனம் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் ஏற்காடு செல்ல இருந்த பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி மற்றும் குப்பனூர் செல்லும் சாலையில் மாற்றம் செய்யப்பட்டது மாற்றி பேருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடத்திற்கு இன்று காலை சுமார் 9 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது மேலும் 48மணி நேரத்தில் போக்குவரத்து சீர் செய்யப்படும் என உறுதியளித்தார்.
Nature