கோவை. நவம்பர்.15-
கோவையின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பொழிவு தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி சுற்றுவட்டாரத்தில் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அதனால் 44.82 அடியாக நீர்மட்டம் இருந்திருக்கிறது. நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கும்,
வழியோர கிராமங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது