கோவை நவ 15:
இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்..!
ஞாயிற்றுக்கிழமையன்றுவெள்ளலூர் குளம் பல்லுயிர் பூங்காவில் பராமரிப்பு மற்றும் மரம் நடும் களப்பணி நடைபெற்றது.215 வது வார தொடர் களப்பணியாக
வெள்ளலூர் குளம், வண்ணத்துப்பூச்சி பூங்காவில் களைச் செடிகளை அகற்றப்பட்டது. பராமரிப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். சாலையோரத்தில் மூங்கில் வனத்தின் அருகில் புதர்கள் அகற்றப்பட்டு, களம் தயார் செய்யப்பட்டு 100 மூங்கில் கன்றுகள் நடப்பட்டன.இந்த நிகழ்வை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மணிகண்டன் ஒருங்கிணைந்தார்.