கோவை மாவட்டம் ஆச்சான் குளம், (நீலம்பூர்) நொய்யல் ஆற்றின் நல்ல தண்ணீரை கொண்டு நிரப்ப முடிந்தாலும் கூட தொடர்ந்து கழிவு நீரால் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த சூழலில்…
1. நொய்யல் ஆற்று மழைக்கால நல்ல தண்ணீரை ஆச்சான் குளத்திற்கு விடவேண்டும்.
2. எந்த அளவு தண்ணீர் உள்ளே வருகிறதோ அந்த அளவை கணக்கிட்டு மதகின் மூலம் (ஷட்டர்கள் மூலம்) வெளியேற்றப்பட வேண்டும்.
3. இதன் மூலம் தொடர்ந்து தூர்வாரப்படாமல் இருக்கும் ஆச்சான் குளத்தின் அடிப்பகுதியில் தங்கியுள்ள கனிமங்கள் வெளியேறி நல்ல தண்ணீரால் நிலத்தடி நீர் செறிவூட்டப்படப்படும்.
4. நொய்யல் ஆற்றில் இருந்து ராஜ வாய்க்கால் மூலம் ஆச்சான் குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகள் சீரமைக்கப்பட வேண்டும்.
இயற்கை கொடுக்கும் நல்ல மழை வாய்ப்பை நல்ல தண்ணீரால் குலத்தை நிரப்பவும், அடிப்பகுதியில் படிந்துள்ள கனிமங்கள் வெளியேறி நல்ல தண்ணீரால் நிலத்தடி நீர் செறிவூட்டவும், நொய்யல் ஆற்று ராஜ வாய்க்கால் மூலம் வரும் தண்ணீர் அளவுக்கு ஷட்டர் பகுதியை திறந்து தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றி இதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளையும், மக்களையும் நீண்டகாலம் நட்சுத் தன்மையிலிருந்து காப்பாற்ற அரசை வேண்டுகிறோம்.நன்றி…
✍️கௌசிகா நதி