கோவை 17-11-2021
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலி. உயிரிழந்த யானையை தாய் யானை தும்பிக்கையால் எழுக்க முயலும் காட்சி பார்ப்போரை கண்களுக்கு செய்துள்ளது.
கேரளா தமிழகம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உலா வருவது வழக்கம். குறிப்பாக தமிழக கேரள எல்லையை பிரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் ஊர் பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகள் ரயில் அடிபட்டு இறப்பதும், பள்ளங்களில் விழுந்தும், மின் வேலியில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்காலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அனை அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானையை தன் தும்பிக்கையால் தட்டு தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனையடுத்து யானை அங்கிருந்து செல்லவே வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு பணியை மேற்கொண்டனர். உயிரிழந்த காட்டு யானையை தாய் யானை எழுப்ப முயலும் காட்சி பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது.