Nature

கோவை வால்பாறை : 29.9.21

 வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 1 வயது மதிக்கத்தக்க புலி அப்பகுதி எஸ்டேட் சுற்றி தெரிந்தது வனத்துறையினர் சிகிச்சையளிக்க புலியை  பிடித்தனர்.

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை புலி சிறுத்தை கரடி சென்னாய், காட்டு எருமை  போன்ற   வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.  வால்பாறை அருகே மூடிஸ் பகுதியில் நேற்று பட்டப்பகலில் புலி ஒன்று சுற்றித் திரிவதை பார்த்த பொதுமக்கள் செல்போனில் படம்பிடித்து  மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் அவர்களுக்கு அனுப்பினர். அதைத்தொடர்ந்து.  புலியை தேடும் பணியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். தேயிலை தோட்டங்கள், முட்புதர்கள் பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் தேடினர்.  மாலை  சுமார்  6  மணியளவில் முடிஷ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ,ஆலோசனை வழங்கி , வனத்துறையினர் தேயிலை தோட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த புலியை பார்த்து வேட்டை தடுப்பு காவலர்கள்  பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து புலியை வலையை போட்டு  பிடித்தனர்.

ரொட்டி கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையம்  அங்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஒன்றரை வயது புலி என்பதும் பெண்புலி என்பதும் தெரியவந்தது. வேட்டையாடும் பொழுது மற்ற வன விலங்குகள் சண்டை போட்டதால்  உடலில் காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உள்ளதாக  டாக்டர் சுகுமார் தெரிவித்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுத்தையே மனித வன விலங்கு மோதல் தடுப்பது மற்றும் விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.