police

SBI வங்கி ATM இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

30.11.21:
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றதால் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் செட்டிபாளையம் போலிசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடனடியாக உதவி ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் சென்ற போலிசார் ஏ.டி.எம் மையத்தில், லாக்கரை திறந்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில் (18) மற்றும் காலீட் (28) என்பதும், கோவையில் உள்ள அமேசன் நிறுவன குடோனுக்கு லாரி மூலம் லோடு இறக்கிவிட்டு, திரும்ப சென்ற போது, செட்டிபாளையம் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர். இதையடுத்து ஷாகில் வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, காலீட் ஏற்கனவே போலியாக தயாரித்து வைத்திருந்த கள்ளச்சாவி மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்து, பணம் இருக்கு லாக்கரை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட இருவரிடமும் வேறு ஏ.டி.எம் இயந்திரத்தில் திருடி உள்ளனரா? வேறு வழக்கில் தொடர்புடையவர்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.