police

வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு கமிஷனர் பிரதீப்க்குமார் உத்தரவு .

26.11.21:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ,இழப்பு ஏற்படும் வாகன விபத்து வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் வாகன விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வாகன விபத்தை குறைக்க தேவையான நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகள் உடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.