police

கோவையில் ஆட்சிப்பணியாளர்கள் கலந்து கொண்ட விழாவில் மேற்கு மண்டல ஐஜி இளையராஜா பாடல் பாடி அசத்தினார்.

30.11.21:
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் “பாரா கானா 2021′ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட குடியுரிமை பணியில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுபோன்று கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆட்சி பணி மற்றும் ஆயுத பணி செய்துவரும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் பாடகர்கள் இருவர் மேடையில் இளையராஜா இசையில் வெளிவந்த வளையோசை பாடலை பாடுக்கொண்டிருந்தனர். இதனைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த மேற்கு மண்டலகாவல்துறை தலைவர் ஐ.ஜி சுதாகர் மேடையேறி பாடல் பாடி அசத்தினார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் பதிவிட்டு ஐஜி-க்கு பாரட்டு தெரிவத்து வருகின்றனர்.