கருமத்தம்பட்டியில் போலீஸ் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் துவக்கி வைத்து அறிவுரை. மாவட்ட எஸ்பி செல்வனகரதினம்.

கோவை. நவம்பர். 15-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில்,சூலூர் காவல் நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boy’s& Girl’s Club- ஐ துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் காவல் ஆய்வாளர் மாதையன் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களும்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்குரிய விதிமுறைகளைப் பற்றியும்,Boys&Girls Club-ஐ கண்காணிப்பதற்கு *Scout Master,Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளதையும் கேட்டறிந்தார். மேலும் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டு பொருட்களும்,அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.அதனைத் தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நோட்டுப்புத்தகம் அடங்கிய பரிசுகளையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *