முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாவிற்கு கோவை மாவட்டத்தில் உள்ள 10 அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.
கோவை. நவம்பர். 22-
தமிழக முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் அரசு விழாவில் பங்கெடுத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.வ.வு.சி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மேடையின் முன் வரிசையில் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எஸ். பி. வேலுமணி உட்பட 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு விழாவின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன. அரசு சார்பாக தெரிவிக்கும்போது அதிமுக எம்எல்ஏக்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜனநாயக நாகரீகமான செயல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.