sports

18.12.21:

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் காவல்துறையினர் 61-வது மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த 450 வீரர்கள் அந்தந்த மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டனர் போட்டியின் நிறைவு நாளான இன்று(17.12.21) தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

நடைபெற்ற தடகளப் போட்டியில் சென்னை மண்டல போலீசார் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும் மகளிர் பிரிவில் சென்னை மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .அதேபோல் ஆண்கள் பிரிவில் ஆயுதப்படை போலீசார் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில்,இங்கு நடைபெற்ற தடகள போட்டியில் 13 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தமிழக காவல்துறையை சேர்ந்த ரங்கநாதன் பிரான்சிஸ் என்பவர் ஆக்கி விளையாட்டு வீரர். அவர் கலந்துகொண்ட ஒலிம்பிக் போட்டியில் அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.5 வினாடிகளில் ஆண்கள் சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 10.2 வினாடிகள்தான் சாதனையாக உள்ளது .காவல்துறையினர் தொடர்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு இது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்றார்.