உள்ளாட்சி இடைத்தேர்தல் : கோவையில் இதுவரை 10 இடங்களில் திமுக வெற்றி..!
கோவை: கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 13 பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 55,280 பேர் வாக்களித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது.
இதுவரை கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.