Today Times

100 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்க ரா தகவல்.
கோவை. அக்டோபர். 5-
மாநகராட்சியில் 100 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வசூலிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் இது
குறித்து கூறியதாவது:-
கோவை மாநகராட்சி முழுவதும் தனியார் அமைப்புடன் இணைந்து 400 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது இந்த கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு ரூ. 100 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் வரி செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வரி வசூல் தொடர்பாக வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சியில் சில முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ராஜகோபால் கூறினார்.