Today Times

கோவை மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் 25 பேருக்கு பதவி உயர்வு.
கோவை. அக்டோபர். 5-
கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 25 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 1996 ஆம் ஆண்டு தீயணைப்பாளர் ஆக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் முதன்மை தீயணைப்பாளராக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய 13 பேருக்கு சிறப்பு நிலை அலுவலராக பதவி உயர்வும்,
தீயணைப்புத்துறை மெக்கானிக் பிரிவில் பணியாற்றிய 12 பேருக்கு சிறப்பு நிலைய அலுவலராக (போக்குவரத்து) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால் கடந்த 25 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருந்த வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.