Today Times

கோவை 11.10.22:
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, பள்ளி மாணவ மாணவிகள் மூலமாக வீட்டுக்கு ஒரு ‘குட்டி காப்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் அறிமுகப் படுத்துகிறார்.

click for live video

சாலை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்ட கோவை உயிர் அமைப்பு, அதிநவீன கேமராக்களை, 4.5 கோடி ரூபாயில் கோவை சிக்னல்களில் நிறுவியுள்ளது. 12 புதிய போக்குவரத்து சிக்னல்களும் நிறுவப்பட்டன. போலீசாருக்கு உடல் மீது பொருத்திக்கொள்ளும், 70 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. விபத்து நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் உயிர் அமைப்பு வழங்கியது.

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வியை அறிமுகப்படுத்தும் நோக்கில், ‘குட்டி காப்’ திட்டம், உயிர் அமைப்பு சார்பில் கோவையில் தொடங்கப்படுகிறது.சோதனை முயற்சியாக, 40 பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த பாடத்திட்டம், 2022-23ம் கல்வியாண்டு முதல் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

12ம் தேதி காலை, 10:15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் முறையில், சென்னையில் இருந்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் அடங்கிய ஆசிரியர் விளக்க கையேடுகளையும் வெளியிடுவதாக உயிர் அறங்காவலர் டாக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமீறல் கூடாது என்று ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரை வற்புறுத்தி, உறுதிமொழி ஏற்க வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். திட்ட துவக்க நாளில், கொடிசியாவில் பள்ளி மாணவர்கள், 5,000 பேர், அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் உறுதி ஏற்கின்றனர்.அனைத்து பள்ளிகளிலும் படிக்கும், 4.5 லட்சம் மாணவர்கள், சாலை பாதுகாப்பு உறுதி ஏற்கின்றனர். இந்நிகழ்வு, உலக சாதனைக்காக பதிவு செய்யப்பட உள்ளது.