today times

கொடுமுடி காவல் நிலையத்தில் டிஐஜி திடீர் முத்துசாமி ஆய்வு.

கோவை. அக்டோபர். 11- ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவல் நிலையத்தில் பிஐஜி முத்துசாமி திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊரக கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி காவல் நிலையத்தில் இன்று கோவை சரக காவல் துணை தலைவர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், மற்றும் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து ஆவணங்களை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட்டார்.

கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டு பிடிக்குமாறு, நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, இரவு நேர ரோந்து முறையாக செய்து குற்றங்களை தடுக்கவும், மனு விசாரணையை செம்மையாகச் செய்ய வேண்டும் என்றும் மனுதாரரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நோன்பின் போது பொதுமக்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் அறிவுரை வழங்கினார்.

மேலும் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கேட்டறிந்தனர் மேலும் சிவகிரி காவல் நிலையத்திற்கும் சென்று பார்வையிட்டு அவர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்.
today times