மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை.80km வேக சூறை காற்று.
02.08.22:
வங்கக் கடல், அந்தமான் தீவு அருகே கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடல் பகுதி- தமிழகம் இடையே உயர் அழுத்த காற்றாக பயணிக்கிறது. இதனால் தமிழக முழுவதும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் ஆங்காங்கே கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி தொடங்கி நீலகிரி மாவட்டம் வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பொழியும். குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் வால்பாறை,சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகள், பாலக்காட்டு கணுவாய்,திருப்பூர் மாவட்டத்தின் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல், விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளில் கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் ஆகிய வங்கக் கடலோர மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படும். படிப்படியாக இந்த மழை முன்னேறி, டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும் மழை தொடரும். ஆரியங்கா கணுவாய் முதல் பாலக்காடு கணுவாய் இடைப்பட்ட பகுதிகளில் மிக கனமழை பொழியும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விட்டுவிட்டு ஆங்காங்கே பரவலாக மழை பொழிவு இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை, அரபிக்கடல், குமரிக்கடல், வங்கக்கடல், இலங்கை மற்றும் அந்தமான் இடைப்பட்ட கடல் பகுதி, பாக்சலசந்தி, மன்னார்குளைகுடா ஆகிய கடல் பகுதிகளில் 65 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடலில் காற்றின் வேகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .இந்த கடலில் வீசக்கூடிய காற்று ஆனது கரையில் இருக்காது. எனவே மீனவர்கள் கரைப்பகுதியில் காற்று இல்லை என கருதி சிறு படகுகளில் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.