weather

நவம்பர் வானிலை அமைப்பு.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

23.11.21:
இலங்கைக்கு தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த வானிலை அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இந்த வானிலை அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையைக் கடந்து தென் தமிழகத்தை நோக்கி நகரக் கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும். இன்று நவம்பர் 23ஆம் தேதி வானிலை நிலவரம். பிற்பகலுக்கு மேல் தென் தமிழகத்தில் கன மழை தொடங்கும். 23 மற்றும் 24 ஆம் தேதி நெல்லை தூத்துக்குடி நாகர்கோவில் கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பதிவாகும் என செயற்கைக்கோள் காட்சிகள் காட்டுகின்றன. இது படிப்படியாக வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மாவட்டங்களான கோவை நீலகிரி கரூர் ஈரோடு சேலம் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் திருவள்ளூர் செங்கல்பட்டு,சென்னை ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமன மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மேற்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம். தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை .நவம்பர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மேலும் ஒரு கன மழையை தமிழகம் சந்திக்க நேரிடும். இதனை அடுத்து வரும் செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.