weather

இயல்பை காட்டிலும் மழை அதிகம்.வானிலை ஆய்வு மையம் தகவல்.

06.12.21:

கோவையில் நேற்று வரை பெய்த மழை அளவை வைத்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் இயல்பை காட்டிலும், 116 மி.மீ., மழை அதிகம் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வடகிழக்கு பருவமழையால், மாவட்டம் முழுவதும் பரவலான மழை கிடைத்துள்ளது. அக்.,1ம் தேதி முதல் நேற்று வரை கோவையில் மொத்தம், 658.8 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது.

வழக்கமாக, குறிப்பிட்ட காலகட்டத்தில் பெய்யும் மழை அளவை காட்டிலும் இது, 116 மி.மீ., அதிகம் என, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழையளவு தகவல் மூலம் தெரியவந்துள்ளது. நடப்பாண்டு மேலும் அதிக மழை பொழிவு இருக்கும் என, கூறப்படுகிறது.

இச்சூழலில், மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பொழிவு இருந்தது; சராசரியாக, 14.03 மி.மீ., மழை பதிவானது. இதன்படி, மேட்டுப்பாளையம்- 1.00 மி.மீ., சின்கோனா-3.00 மி.மீ., சின்னகல்லார்-47.00 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.,-10.00 மி.மீ., வால்பாறை தாலுகா-8.00 மி.மீ., சோலையார்-5.00 மி.மீ., சூலுார்-2.00 மி.மீ., கோவை தெற்கு-71.00 மி.மீ., விமானநிலையம்-20.00 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம்-21.40 மி.மீ., வேளாண் பல்கலையில்-8.00 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் மொத்தம்-196.40 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக, 14.03 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக, பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.