weather

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும். வானிலை ஆய்வு மையம் தகவல்.

07.12.21:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையை ஒட்டி, வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக,தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.வரும் 9ம் தேதி அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் இன்று சில இடங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலையில் பனி மூட்டம் நிலவும். அதிகபட்சம் 31டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வேப்பூர், கடலுார், போடிநாயக்கனுாரில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. உத்தமபாளையம், திருப்பூர், 9; பெருஞ்சாணி, ஸ்ரீவில்லிபுத்துார், 7; லெப்பைக்குடிகாடு, ஆண்டிப்பட்டி, கூடலுார், 6 செ.மீ., மழை பதிவானது.