கோவை 18.12.23:
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 133.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் இந்த கோவையில் கொங்கு மொழி சிறப்பானது.
செம்மொழி மாநாட்டை இந்த கோவை கண்டுள்ளது என்றார்.2010 ஆம் ஆண்டு கோவையில் செம் மொழி மாநாடு நடத்தப்பட்டது.
அன்றைய தினம் கலைஞர் 15 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் ஒன்றுதான் செம்மொழிப் பூங்கா அமைப்பது.
நீலகிரி தாவரங்களை பாதுகாக்கும் விதமாக முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பிலும் இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் பரப்பிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.செம்மொழி வனம், மகரந்த வனம், நட்சத்திர வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்படும் என்றார்.தமிழகம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திற்கே முன்மாதிரி மாநிலமாக திகழும் என தெரிவித்தார். #கோவை #செம்மொழி பூங்கா #முதல்வர் மு.க. ஸ்டாலின் #semmolipark #kovai #cmstalin