குடிநீரை, மோட்டார் மூலம் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை.
06.12.21:
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறுவாணி பில்லூர் 1. பில்லூர் 2. ஆழியாறு வடவள்ளி கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில இடங்களில் வீட்டு இணைப்புகளில் மின் மோட்டார்கள் மூலம் குடி நீரை உறிஞ்சி எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.இதனை தடுக்க மாநகராட்சியில் குழு அமைக்கப்பட்டுள்ளது .
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது மின் மோட்டாரை பயன்படுத்தி குடி நீரை உறிஞ்சி எடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.கண்காணிக்க 5 மண்டலங்களிலும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அந்தந்த மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள்’ ஆய்வின்போது சட்டவிரோதமாக குடிநீரை மின் மோட்டார் பொருத்தி இருப்பது தெரியவந்தால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.