பள்ளி மைதானத்தில் குழி தோண்டி சூயஸ் தண்ணீர் தொட்டி கட்டும் கோவை மாநகராட்சி.மாணவர்கள் எதிர்ப்பு.அதிகாரிகள் அலட்சியம்.
Video Link Click:coimbatore suez water scheme
07.01.22:
மக்களின் அடிப்படை தேவை குடி நீர்.அதனை தடை இன்றி விநியோகம் செய்வதே அரசின் கடமை.கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி,பில்லூர் இரண்டாவது கூட்டு குடி நீர் திட்டத்தில் இருந்து குடி நீர் வழங்க அம்ரூட் திட்டம் தொடங்கப்பட்டது.Jnnurm திட்டத்தில் இருந்து பிரித்து தொடங்கப்பட்ட இத்திட்டம்,சூயஸ் என்ற வெளி நாட்டு தனியார் கம்பெனிக்கு 26ஆண்டு காலத்திற்க்கு குடி நீர் வினியோகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது.
595 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம்,சூயஸ் நிறுவத்திற்க்கு 3150 கோடி ரூபாய்க்கு உரிமம் கொடுத்து ஒப்பந்தம் போடப்பட்டது.இத்திட்டம் எப்படி 3150 கோடி ரூபாய் ஆனது என அன்றைய திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி போராட்டங்கள் நடத்தியது என்பது பதிவு.திமுக ஆட்சி அமைந்த உடன் அத்திட்டத்தின் ஊழல் விசாரிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.ஆனால் தற்போது சூயஸ் நிறுவனம் பணியை தொடர்வதுடன்,மாநகராட்சி சொத்துக்களை கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்திற்க்கு 5ஆம் தேதி வந்த அதிகாரிகள்,ஜேசிபி எந்திர உதவியுடன் மைதானத்தில் குழி தோண்ட்ட ஆரம்பித்தனர். 29லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை குடி நீர் தொட்டி கட்டப்பட உள்ளது யாருக்கும் தெரியாது.இதனை அறிந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10அடி தூரத்தில் மாநகராட்சி பூங்கா உள்ளது.பள்ளி முன்புறத்தில் மாநகராட்சி கலை அரங்கம் இருந்தும் அங்கே தண்ணீர் தொட்டி கட்டாமல் பள்ளி மைதானத்தை பாழ்படுத்துவதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.இது ஊழல் திட்டம் என எதிர்த்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு இனி வரும் நாட்களில் தெரியவரும்.