கோவை 18.12.23:

காரணம் சொல்வோர் கண்டிப்பாக காரியம் செய்ய மாட்டார்கள் மு.க.ஸ்டாலின்.

மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கோவையில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
பின்னர் கோவை மத்திய சிறை வளாகத்தில், செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க விமான மூலம் கோவை வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.ஆளுநர் ரவியும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் கோவை வந்து இறங்கினர்.
முக்கிய நபர்கள் செல்லும் பாதையில் ஆளுநர் ரவி சென்று விட்டார்.பயணிகள் வரும் வழியில் வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.பின்னர் எஸ் என் ஆர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்.தமிழக அரசின் பல துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களை பார்வையிட்டார்.
அந்தந்த துறை சார்ந்து வரக்கூடிய பொதுமக்கள் குறைகளை, அதனை எத்தனை நாட்கள் தீர்த்து வைக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை கேட்டு அறிந்தார்.அங்கு அழைத்து வரப்பட்டிருந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர்
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 133.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படும் இந்த கோவையில் கொங்கு மொழி சிறப்பானது.
செம்மொழி மாநாட்டை இந்த கோவை கண்டுள்ளது.
இங்கே மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.சென்னை பெரு மழையை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டத என்று கூறிய அவர், மூன்று நாட்களில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினார்கள் என்றார்.தென் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை பொழிந்து வருகிறது.அரசு இயந்திரங்கள் முழு வேகத்தில் அங்கே பணியாற்றுவதாக தெரிவித்தார்.
சென்னையில் செயல்பட்டது போல் தமிழக அரசு ,போர்க்கள அடிப்படையில் செயல்பட்டு தென் மாவட்ட மக்களையும் மீட்டெடுப்போம் என தெரிவித்தார்.
தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை, எளிய மக்கள் பயன்பட்டு வருகிறார்கள் என்றார்.
அனைத்து தரப்பு மக்களிடமும் திட்டங்கள் சென்றடைய, திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு , மக்களிடம் திட்டங்கள் சிறப்பாக சென்றடைகிறது என்பதை உறுதிப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
தமிழக அரசின் 13 துறைகள் மூலமாக, மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் செய்யப்படுகிறது என்றார் .சில தரப்பு மக்களிடம் திட்டங்கள் சரியாக சென்றடையவில்லை என்ன சுட்டிக்காட்டிய முதல்வர் ,இதனை சீர்படுத்தத்தான் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடையும் வகையிலும், தாமதத்தை குறைக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் ,முதியோர் குறைகளை தீர்த்து வைக்க தனி கவனம் செலுத்தப்படும் என உறுதி அளித்தார்.
அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் ஒரே குடையின் கீழ் அமர்ந்து 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும் என கூறிய முதல்வர் ,எனது நேரடி கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்படும் என்றார் . வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பாதிப்பால் உள்ள மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் முடிந்த பின், மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
காரணம் சொல்வோர் கண்டிப்பாக காரியம் செய்ய மாட்டார்கள் என்பது பழமொழி .
இதனை கலையத்தான் மக்களின் கோரிக்கைகளை பரிசளித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் மக்களுக்கு தீர்வு அளிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த விழாவில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 7945 நபர்களுக்கு வீட்டு பட்டம், முதியோர் ஓய்வு ஊதியம், சாலை விபத்தில் நிவாரணம், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.110.51 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *