அந்தமான் அருகே காற்று சுழற்சி.தமிழகத்தில் கனமழை.
click for live video
26.07.22:
ஜூலை 26 ஆம் தேதி வானிலை அறிக்கை.அந்தமான் கடற்ப்பகுதியில் காற்று சுழற்சி 25ஆம் தேதி பிற்பகல் உருவாக்கி உள்ளது. இந்த காற்று சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவக்காற்று அந்தமான் பகுதியை நோக்கி ஈர்க்கப்படுகிறது.இதனால் காற்று, கேரளாவில் நுழைந்து தமிழக வழியாக அந்தமானின் தெற்கு கடற்பகுதியை நோக்கி நகர்கிறது .
எனவே 26 ஆம் தேதி மாலை மற்றும் இரவில்,தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு இருக்கும். சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, உட்பட தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் இரவு மழை தொடங்கும்.பின்னர் படிப்படியாக புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர் , விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, திருவண்ணாமலை ,திருப்பத்தூர் ,வேலூர், ராணிப்பேட்டை உள் மாவட்டங்களாம் திருச்சி, கரூர் ,நாமக்கல், சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பொழியும்.
கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் ஆங்காங்கே அன்னுர் பகுதிகளுக்கும் , வால்பாறை பகுதி மற்றும் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழியும். நீலகிரி மாவட்ட மலைப்பகுதி ,ஈரோடு மாவட்ட பகுதி என்று எல்லா பகுதிகளுக்குமே கனமழையாக 26 ஆம் தேதி மாலை, இரவு இருக்கும். ஒவ்வொரு இடத்திலும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தான் மழை பொழிவு இருக்கும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த மழை ஜூலை 28 ஆம் தேதி வரை நீடிக்கும்.இதனை தொடர்ந்து தென் மேற்கு பருவமழை பொழியும்,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், மழை தொடரும் என செயற்கை கோள் காட்சிகள் வானிலை நிலவரத்தை விளக்குகின்றன.