29.11.21:
இலங்கை அருகே நிலவிய சுழற்சி வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் நிலவுகிறது.இந்த வானிலை அமைப்பால் அடுத்த 3நட்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பொழியும். இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள். கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் ஒருசில உடங்களில் கனமழை பொழியும்.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் கனமழை எதிர்பார்க்க முடியும். சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங் மிதமான மழை தொடர்ந்து பதிவாகும். அதேபோல வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை சில பகுதிகளில் கனமழை என்பது பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தீவிரமாக வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டத்தில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கனமழை தொடரும் .டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை தீவிரம் என்பது அதிகரித்துக் காணப்படும். திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் தொடர் கனமழை பதிவாகும்.

வங்க கடல் பகுதிகள் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசப்படும். ஆகவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால்,இன்று 24மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,தஞ்சாவூர் ,விழுப்புரம் ,நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்கால், தூத்துக்குடி, நெல்லை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, அரியலூர், சேலம், வேலூர் மற்றும் பெரம்பலூர், தர்மபுரி 24மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *