கோவை 17.11.21:

கோவை மாவட்டத்தில் (16.11.2021) நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில்*அக்டோபர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பாக பணிபுரிந்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி* , சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் தாமோதரன் ,நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த வடவள்ளி காவல் நிலைய பெண் காவலர், சிறந்த முறையில் CCTNSல் கோப்புகளை பதிவேற்றம் செய்த ஆனைமலை காவல் நிலைய காவலர், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து

திறம்பட செயல்பட்ட கோமங்கலம் காவல் நிலைய நீதிமன்ற மு.நி.பெ.காவலர் ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக கருமத்தம்பட்டி காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளரிடம் மற்றும் சிறந்த உட்கோட்டமாக கருமத்தம்பட்டி உட்கோட்டத்தை தேர்வு செய்து அதற்கான சுழற் கோப்பையினை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கிய ராஜ், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., வழங்கி
கௌரவ படுத்தினார்கள்.

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.

இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங்கில் ஆர்வமுள்ள பணத் தேவை அதிகம் உள்ள நபர்களை குறி வைத்து மோசடி செய்த வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி* , உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர்-3, காவலர்-2 மற்றும் ஊர்க்காவல் படை காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் (16.11.2021) பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *