கோவையில் டெங்கு காய்ச்சல்.31 பேர் சிகிச்சை.
21.12.21:
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில், பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, பெரியவர்களை விட குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 30-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு, 13 குழந்தைகள், 18 பெரியவர்கள் என, 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என,மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்:- ‘டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு 30 படுக்கை,பெரியவர்களுக்கு 50 படுக்கைகள் உள்ளன.சிகிச்சை பெறும் அனைவரும் நலமாக உள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்,” என்றார்.