தமிழ்நாடு காவல் துறையின் 63வது தடகளப் போட்டிகள்.

கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற
தமிழ்நாடு காவல் துறை விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கிரேட்டர் சென்னை போலீஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருது வென்றது.

தமிழ்நாடு காவல் துறையின் 63 வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கடந்த 14ஆம் தேதி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒன்பது மண்டலங்களைச் சேர்ந்த தடைகள விளையாட்டு வீரர்கள் 750 பேர் இதில் பங்கேற்றனர்.இதில் தடகளம், சைக்கிள் போட்டி, கோக்கோ உள்ளிட்ட மாநில அளவிலான இப்போட்டிகல், ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாக நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையே ஆன 63வது தடகளப் போட்டிகளில் ,
கடந்தாண்டு நிகழ்த்தப்பட்ட சாதனைகளை விட பல புதிய சாதனைகள் வீரர்கள் நிகழ்த்தினார்கள். பதினாறு விதமான தடகளப் போட்டிகளில், கடந்தாண்டு சாதனைகளை இந்த ஆண்டு வீரர்கள் முறியடித்துள்ளனர் .குறிப்பாக இந்த தடகளப் போட்டிகளில் 12 சாதனைகளை கிரேட்டர் சென்னை போலீஸ் அணி பதிவு செய்துள்ளது.
இதே போல ஆயுதப்படை அணி 100 மீட்டர் ரிலே பந்தயத்தில் புதிய சாதனை படைத்தது.மேற்கு மண்டல காவல் அணியை சேர்ந்த கவிப்பிரியா குண்டு எறிதல் போட்டியில் 49.98 மீட்டர் தூரத்திற்கு குண்டு எரிந்து கடந்தாண்டு சாதனையை முறியடித்தார்.மூன்று நாட்கள் நடைபெற்ற 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கிரேட்டர் சென்னை அணி தட்டிச் சென்றது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.