ஜூன் 21 சர்வதேச யோகா தினம். கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என 600க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
பொதுவாகவே காவல்துறையினர் அன்றாட பணி என்பது மனஅழுத்தம் வேலைப்பளு நிறைந்தது.இதற்கு யோக செய்வதால் மன அமைதி கிடைக்கும். யோகாசனம் செய்வதால் நம் உடலுக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பலம் பெறும் . சீரான சுவாசம் கிடைப்பதோடு, இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது.
தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியடைகிறது.யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடல் இரத்த ஓட்டம் சீரடைகிறது.நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்தால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.
தினமும் இந்த யோகாசனங்களை செய்து வந்தால், தொந்தி இல்லாத காவலர்களை நாம் பார்க்கலாம்.