KOVAI 20.03.25:      
வீட்டிற்குள் புகுந்த நாகப் பாம்பை பிடிக்க முயன்ற, பாம்புகளின் பாதுகாவலரை, நாகப்பாம்பு கொத்தியது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


கோவை தொண்டாமுத்தூர் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக, பாம்புகளின் பாதுகாவலர் சந்தோஷுக்கு தகவல் வந்தது. விஷம் கொண்ட நாகப்பாம்பை சந்தோஷ் பிடிக்க முயன்ற போது, நாகப்பாம்பு கொத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 19ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்தார்.

 

கடந்த 20 ஆண்டுகளாக கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவிக்கும் பணி செய்து வந்தார் சந்தோஷ். தற்போது அவரின் இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ளனர். பலரின் உயிரை பாதுகாத்த பாம்புகளின் பாதுகாவலர் சந்தோஷ் குடும்பத்திற்கு, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பணியில் இருக்கும் வன ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது. அதே போல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த சந்தோசத்தின் குடும்பத்திற்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

இந்நிலையில் சந்தோஷின் நெருங்கிய நண்பர்கள், அவர்களால் இயன்ற பண உதவியை அவரின் குடும்பத்திற்கு செய்து வருகின்றனர். தன்னலம் கருதாது, பொது நலத்துடன் இயங்கி வந்த சந்தோஷத்தின் குடும்பத்திற்கு உதவ நினைப்பவர்கள், அவரது மனைவி வங்கி கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை செய்யலாம்.

S.Sarnya,W/O K.Santhosh kumar

AC NO:7859381759

INDIAN BANK

VADAVALLI.

PHONE PAY:6379772711

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *