கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் கூட்டம் 15.11.2021ல் R.S.புரத்தில் நடைபெற்றது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
தொடரும் மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் முடக்கப்படும்
குறு சிறு தொழில்கள். ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம்
பாதிப்புகள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும்
அபாயம். மூலப்பொருட்கள் விலையேற்றம் தடுக்க நடவடிக்கை கோரி ஆண்டு ஒன்று ஆகியும் கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு 100% சதவீதம் விலை உயர்வு. உற்பத்தி துறை சார்ந்த தொழில் முனைவோர்கள் உற்பத்தி 50% சதவீதம் குறைப்பு. ஜாப்பாடர்கள் செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஆர்டர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் ஒன்றிய அரசு விலை உயர்வு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முழுமையும் உள்ள தொழில் அமைப்புகளை கலந்து பேசி குறு சிறு தொழில்களை பாதுகாக்க மாநிலம் முழுமையும் குரல் கொடுக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது
தமிழக அரசு குறுந்தொழில் முனைவோர் நலன் கருதி தங்கள் வாங்கும் புதிய இயந்திரங்களுக்கு
25% சதவிகிதம் மானியம் வழங்கி வருகிறது தற்போது மானியம் பெற
ISO சான்றிதழ் வேண்டும் என்ற புதிய நிர்பந்தம் கொண்டு வந்து உள்ளது இந்த புதிய நிர்பந்தால் ஜாப்பாட்கள்
செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் உதிரிபாகங்கள்
செய்து வரும் குறுந்தொழில் முனைவோர்களும் தங்கள் வாங்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெற ஆயிரகானக்கான பணம் செலவு செய்து ISO எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்
இந்த நிலையால் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெற முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்கள் மாண்புமிகு தமிழக முதல்வரிடம்
ISO பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு எளிதாக மானியம் வழங்கிட உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது என
கூட்டமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது