சேலம் பாலக்காடு இடையே முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கோவையிலிருந்து இயக்கம்.
கோவை 11.07.22:
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இன்று முதல் 11.07.22 இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதி வில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06804), சொர்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து,இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இதேபோன்று கோவை-சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06805), கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூர் சென்றடையும்.
பாலக்காடு-கோவை முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06806), பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
கோவை-பாலக்காடு இடையிலான முன்பதிவில்லா மெழு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06807), கோவை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டை சென்றடையும்.
கோவை-சேலம் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06802), கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்றுமுதல் காலை 9 மணிக்கு புறப்பட்டு. மதியம் 1 மணிக்கு சேலம் ரயில் நிலையம் சென்றடையும். இதேபோன்று சேலம்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06803) சேலம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த 3 ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.