அனைவரது கைகளிலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், தகவல் தொழில்நுட்பத்தை சுமந்து google போன்ற தேடுதலங்களில் வலை விரித்து, உலகை நம் உள்ளங்கையில் அடக்கி வைக்கிறது. ஆனால் இது தான் தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துவதுடன், சவாலாகவும் திகழ்ந்து வருகிறது.
08.07.22:
குழந்தைகள் பாதுகாப்பு, பெற்றோர்கள் பாதுகாப்பு, போன் லொகேட்டர், இதுபோன்ற பல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள், கூகுள் பிளே ஸ்டோரில் கொட்டிக் கிடக்கின்றன. இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை நமது ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து வைத்தோம் என்றால் நாம் உளவு பார்க்க ப்படுகிறோம் என்பது உறுதி. ஆம் கூகுள் பிளே ஸ்டோரில் famisafe என்ற ஒரு செயலியை நீங்கள் இறக்கி இருந்தால், நீங்கள் வேவு பார்க்கப்படலாம். ஆம் உங்கள் குடும்பத் தகவல்கள் ஜிபிஎஸ் லொகேஷன் மூலமாக நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள்.
இதே போல phone tracker,my family locator,find my kids,pingo,family gps,mm guardian,find my phone.இது போன்ற பத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள், பிளே ஸ்டோரில் பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை, இதுவரை சுமார் கோடிக்கணக்கான மக்கள் டவுன்லோட் செய்து வைத்திருப்பது தான் ஆபத்தின் உச்சம். எனவே இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், உடனடியாக அதனை அன் இன்ஸ்டால் செய்யவும்.
இந்த செயலிகள் பாதுகாப்பற்றவை என சைபர் கிரைம் காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாகரீக வளர்ச்சியால் இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் குழந்தைகள் பெரியவர்கள் செல்போனில் விளையாடுகிறார்களா அல்லது வேறேனும் தடை செய்யப்பட்ட வெப்சைட்டுக்குள் போகிறார்களா என்பதை கண்டறிந்து உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில், இதுபோன்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரில் உலவுகிறது. எனவே இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.