பத்திரிகையாளர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நன்றி.
04.12.21:
பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து பத்திரிகையாளர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் விடுத்துள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றவுடன் தி.மு.க., தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பத்திரிகையாளர்களின் நலன் கருதி குழந்தையின் பசியறிந்து சோறூட்டும் தாய் போல, செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள், அவர்களுக்கு முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும், உரிய முறையில் வழங்கப்படும் என்று தாயுள்ளத்தோடு அறிவித்தார்.
தற்போது இன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மானியக்கோரிக்கையின் போது, பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்க ஆணை வெளியிட்டுள்ளார். இந்த நல வாரியம் மூலம் பத்திரிகையாளர்களின் குழந்தைகள் 10வது முதல் கல்லூரி படிப்பு வரை படிக்க கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, மகப்பேறு உதவிதொகை, கண் கண்ணாடி செலவுத்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவி தொகை ஆகியவற்றை வழங்க ஆவண செய்துள்ளார்.
இதன் மூலம் பத்திரிகையாளர் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு பெரிதும் உறுதுணையாக நின்ற மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.சாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி
இங்கணம்
சி.ஜெயசந்திரன்
மாநில தலைவர்
பொன்.வல்லரசு
மாநில பொதுச்செயலாளர்
சு.அருண்குமார்,
மாநில பொருளாளர்