+2 மாணவி தற்கொலை வழக்கு பள்ளி முதல்வர், ஆசிரியரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம்.
கோவை. நவம்பர். 15-
கடந்த 11-ஆம் தேதி மாலை பிளஸ் டூ மாணவி பள்ளி ஆசிரியர் தொடர் பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து அனைத்து தரப்பட்ட மக்கள், மாணவ கள், சமூக சேவை அமைப்பு, மாதர் சங்கம் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 12-ஆம் தேதி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து நேற்று காலை பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உடலைப் பெற்று இறுதிச்சடங்கை நிறைவேற்றின. இந்தநிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது :-
தமிழக அரசும் காவல் துறையும் குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம். கடுமையான தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 நபர்களும் உடனடியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காரணத்தினால் மாணவிக்கு பள்ளியில் வேறு யாராவது பாலியல் தொந்தரவு கொடுத்தனரா? ஆசிரியர் மற்றும் முதல்வர்களிடம் முழு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.