வங்கக் கடலில் புதிய புயல் சின்னம். தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வுமையம் சற்றுமுன் தகவல்.
கோவை. அக்டோபர். 27-
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி புதிய புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
27.10.2021
நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.