கோவை அருகே வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சிறுத்தை. மக்கள் பீதி. கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை.
கோவை. அக்டோபர். 27-
கோவை மாவட்டம் காரமடை அருகே வளர்ப்பு நாயை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் பீதி.
கோவை மாவட்டம் காரமடை அருகே மேல் பவி, நீலம்பதி, ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. மேற்கண்ட கிராமங்களைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள்ளும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஆதி மாதனூர் கிராமத்தில் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்துக் கொன்று இழுத்துச் சென்றது.
சிறுத்தையை குடியிருப்புப் பகுதிக்குள் கண்ட மக்கள் பெரும் பீதி அடைந்தனர். மேலும் வளர்ப்பு பிராணிகள், மனித உயிர் இழப்புக்கள் ஏற்படும் முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.” alt=”cheeta” />