கொரோனா பரவல் தாக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக கோவை மாநகராட்சியில் உள்ள 84 பள்ளிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு போதுமான இடைவெளியுடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.