பழங்குடி மாணவியின் மருத்துவர் கனவு ஊடங்கங்களின் உழைப்பால் நனவாகிறது
கோவை திருமலையம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பணுர் பழங்குடியினர் கிராமத்தில் மலசர் பழங்குடி மாணவி சங்கவி மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு உரிய வழிகாட்டுதல் இல்லாமலும் ,உரிய ஆவணங்கள் இல்லாமலும் பல இன்னல்களை சந்தித்து வந்தார் இதையடுத்து ஊடக பத்தியாளர்களின் முயற்சியால் இவரின் கோரிக்கையையும் ,கிராம மக்களின் கோரிக்கையும் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ,
உடனடியாக அரசு மக்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை, வகுப்பு சான்று , சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவைகளை விரைந்து செய்து கொடுத்தது , பல தொண்டு நிறுவனங்கள் கல்வி கூடம் ஒன்றும் ,தையல் பயிற்று கட்டிடமும் கட்டி கொடுத்தனர் ,
இந்த கிராமத்தில் முதல் தலைமுறை கல்வி கற்ற முதல் மாணவி சங்கவி அவர்கள் தொடர் விடா முயற்சியுடன் படித்து 108 கட் ஆப் மதிப்பெண்ணுக்கு 202 வாங்கியுள்ளார் இதையடுத்து தங்கள் கிராமத்தில் முதல் தலைமுறை மருத்துவர் கனவு நனவாக இருப்பதால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றிகள்.